search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி கரையோர பகுதி"

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் தவுட்டுப்பாளையம், கட்டிபாளையம், நொய்யல் பகுதிகளில் காவிரிக் கரையோரம் குடியிருக்கும் குடியிருப்புகளை ஆய்வு செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், கரூர் கோட்டாட்சி தலைவர் சரவண மூர்த்தி, மண்மங்கலம் தாசில்தார் கற்பகம் ஆகியோர் கொண்ட குழுவினர் கரூர் தவுட்டுப்பாளையம், கட்டிபாளையம், நொய்யல் பகுதிகளில் காவிரிக் கரையோரம் குடியிருக்கும் குடியிருப்புகளை ஆய்வு செய்தனர்.

    மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    எனவே, காவிரி கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும். அவர்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளை காவிரி கரையோரமாக விளையாடுவதற்கோ?, குளிப்பதற்கோ அனுமதிக்கக்கூடாது.

    அதே போல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் யாரும் குளிக்க வேண்டாம் என்றார். அப்போது வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் தனபால், ராஜ்கமல் மற்றும் வருவாய்துறை அலுவலர் உடனிருந்தனர். #tamilnews
    ×